கோடையில் சருமத்தை பராமரிக்க உதவும் சில வீட்டுப் பொருட்கள்!!

கோடையில் உடலையும், சருமத்தையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளது. ஏனெனில் சற்று உடலை கவனிக்காவிட்டாலும், உடலிலும், சருமத்திலும் பெரும் பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக உடலை விட சருமத்தில் தான் அதிக அளவில் பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, சருமத்தின் நிறம் மாறுதல், பருக்கள், முகம் சோர்ந்து பொலிவிழந்து காணப்படுதல் என்பன. எனவே இத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு, வீட்டிலேயே சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும். அதிலும் வீட்டில் இருக்கும் சிறிய அழகு நிலையமான சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தை அழகோடு, மின்ன செய்யலாம். பொதுவாக தயிர், பால், எலுமிச்சையை மற்றும் தான் சருமத்தை அழகோடு வைப்பதற்கும், மாறுபட்டிருக்கும் சரும நிறத்தினை சரியாக வைக்கவும் உதவியாக உள்ளது. சரி, இப்போது வீட்டின் சமையலறையில் இருக்கும் எந்த அழகு பொருட்களை பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யலாம் என்று பார்ப்போமா!!!



தயிர்
 தயிரில் குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, சருமம் குளிர்ச்சியடைவதோடு, பழுப்பு நிற சருமமும் போய்விடும்.


பால் 
பாலில் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை இறுக்கமடையடச்செய்வதற்கான பொருள் அதிகம் உள்ளது. எனவே திகமும் முகத்தை பாழால் கழுவு வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வெள்ளரிக்காய்
 கோடையில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமின்றி, அழகிலும் நன்மை தருகிறது. அதற்கு வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், சருமம் அழகோடு மின்னும்.


தர்பூசணி 
                  நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தர்பூசணியும் அழகுப் பராமரிப்பில் பயன்படுகிறது. எனவே கோடையில் கிடைக்கும் இந்த பழத்தை வைத்து, முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க் போட்டால், முகம் பளிச்சென்று இருக்கும்

தக்காளி  
       தக்காளி அழகுப் பராமரிப்பில் பெரிதும் பயன்படுகிறது என்று அனைவருக்கும் தெரிந்ததே. அதிலும் தக்காளியை வைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முதுமைத் தோற்றம் நீங்கி, சுருக்கங்கள் குறைந்து, சரும நிற மாற்றமும் மறையும்.

ஸ்ட்ராபெர்ரி
        ஸ்ட்ராபெர்ரி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க மட்டுமல்லாமல், இளமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவதையும் தடுத்து, சருமத்திற்கு அழகான நிறத்தையும் தரும்.

சந்தனப் பொடி 
      பொதுவாக சந்தனம் என்றாலே, முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்ற எண்ணம் உள்ளது. உண்மை தான். அதிலும் சந்தனப் பொடியை தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு போட்ட,ல முகம் நன்க அழகாக ஜொலிக்கும்.

ஐஸ் 
       கோடையில் உடனே முகத்தை பொலிவுடன் வெளிப்படுத்த வேண்டுமெனில், அப்போது வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தை தேய்த்து வந்தால், முகத்தில் இருக்கும் பருக்களும், பிம்பிள்களும் மறைந்துவிடும்.







.

No comments: