வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் - Historical Love Stories


வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள்!!!

காதல் செய்யும் அனைவரும், அந்த அருமையான காதலை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக கொண்டாடுகின்றோம். அத்தகைய தினத்தில் அனைத்து காதலர்களும், தம் துணையிடம் காதலை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி, அவர்களை மகிழ்வித்து, சந்தோஷமாக அந்த தினத்தை கொண்டாடுவார்கள். மேலும் சிலர் இந்த தினத்தில் தம் துணைக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையிலும், அவர்கள் மறக்க முடியாத வகையிலும் காதலை வெளிப்படுத்துவார்கள்.

சிலருக்கு காதலில் நம்பிக்கை இருக்காது, பார்த்தவுடன் காதல் என்றால் அனைவரும் சிரிப்பார்கள். சிலர் வெளித்தோற்றத்தை வைத்து தான் காதல் வரும் என்றும், சிலரோ காதல் இந்த வயதில் மட்டும் தான் வரும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் காதல் மனதில் தோன்றுவது. அத்தகைய காதல் எந்த நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். ஏன், அந்த காலத்திலேயே பலர் காதல் செய்துள்ளனர். மேலும் அந்த காதலில் சில வரலாற்று சிறப்புமிக்கதாகவும், யாராலும் மறக்க முடியாததாகவும் உள்ளன. ஏனெனில் அவை அனைத்திலும், ஒரு சுவாரஸ்யம் உள்ளது.

இப்போது அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகள் சிலவற்றை, உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்.


விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் 
பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் இருக்கும் ஒரு மறக்க முடியாத காதல் கதை என்றால் அது ராணி விக்டோரியா மற்றும் பிரின்ஸ் ஆல்பர்ட் கதை தான். இந்த காதல் கதையில், இருவரும் சொல்ல முடியாத அளவில் ஒருவரை ஒருவர், வாழ்நாள் முழுவதும் அவ்வளவு காதல் செய்துள்ளனர்.

ஷாஜகான் மற்றும் மும்தாஜ் 
அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் காதல் சின்னங்களுள் ஒன்று. இந்த மஹாலை ஷாஜகான் தன் மனைவி மும்தாஜிற்காக கட்டியுள்ளார். இது ஒரு சோகமான காதல் கதை. இந்த கதையை நிச்சயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.

ட்ரிஸ்டன் மற்றும் சோல்ட் 
இதுவும் மிகவும் சோகமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு காதல் கதை. இது ஒரு உண்மையான காதல் கதை. எப்படியெனில், இவர்கள் உருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இறுதியில் இருவரும் ஒன்று சேராமல், மற்றவர்களை திருணம் செய்து பிரிந்துவிட்டனர் என்பதே ஆகும்.

நெப்போலியன் மற்றும் ஜோஸ்பின் 
இந்த வரலாற்று சிறப்புமிக்க காதல் கதையை வைத்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில் இதில் நெப்போலியன் தனது மனைவி ஜோஸ்பினை பைத்தியமாக காதலித்து, இறுதியில் ஜோஸ்பினால் ஒரு குழந்தையை தர முடியாது என்ற காரணத்தினால் அவரைப் பிரிந்துவிட்டார்.


பாரீஸ் மற்றும் ஹெலன் 
இந்த காதல் கதையில் மிகுந்த அழகுடைய திருமணமான ராணி ஹெலனும், பாரீஸும் காதல் வயப்பட்டனர். இந்த கதையின் மூலம் காதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதே இந்த கதையின் சிறப்பம்சம்.


கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி 
இதுவும் ஒரு புகழ்பெற்ற காதல் கதைகளுள் ஒன்று. இந்த கதையைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஏனெனில் இந்த கதையை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவ்வளவு அழகாக நாடகத்தின் மூலம், இந்த கதையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். இன்றும் இந்த கதையைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு சந்தேகம் உள்ளது.


ரோமியோ மற்றும் ஜூலியட் 
எந்த ஒரு காதல் செய்யும் ஜோடிகளும், இந்த சோகமான மற்றும் மறக்க முடியாத காதல் கதையைப் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். இந்தகதையில் இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையாகவும், பைத்தியமாகவும் காதலித்து, இறுதி வரை தங்கள் காதலுக்காக தைரியத்துடன் போராடியது, அழியாமல் மக்கள் மனதில் உள்ளது.


சலீம் மற்றும் அனார்கலி 
இதுவும் ஒரு பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகளுள் ஒன்று. இதில் இளவரசர் சலீம், தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியான அனார்கலி மீது காதல் வயப்பட்டார். ஆனால் அவர்களின் காதல் சக்கரவர்த்திக்கு பிடிக்காததால், அனார்கலியை வேசி மகள் என்று கூறி, அவர்களைப் பிரிக்க அனார்கலியை உயிரோடு செங்கல் சுவர் மத்தியில் அமர வைத்து, சமாதி கட்டினார்.

No comments: