கை, கால் மூட்டு வலி குறைய தீர்வு

கை, கால் மூட்டு வலி குறைய தீர்வு..!

"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, லண்டனில் வெளியாகும், "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: "அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின.

உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.

கை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், "ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது.

இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, "ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, "ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன

வாய் புற்று நோய் அறிகுறிகள்

வாய் புற்று நோய் அறிகுறிகள்..!

 
வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகமாகி வருகிறது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த தோல்நோய் சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.
அறிகுறிகள்:

* வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும்.

* வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும்.

* நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமா�0��் உள்ளன.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் க�ாயில் உண்டாகும் நோய்களுக்கு காரணமாகின்றன. அந்த வகையில் நம் வாயை சுத்தப்படுத்துவதற்கும் சில உணவுகள் உள்ளன.

வாயை சுத்தப்படுத்தும் உணவுகள்:

கிரீன் டீ: தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருக வேண்டும். இதனால், புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகும். தினமும் வாயும் சுத்தமாகும்.

பாலாடைக்கட்டி:

இதை தினமும் சாப்பிடும்போது, பற்களில் உள்ள எனாமலுக்குத் தேவையான பி.எச். அளவு சமன் செய்யப்படுகிறது. அதனால், பற்களின் உறுதி பாதுகாக்கப்படுகிறது.

கேரட்:

கேரட்டை மெதுவாகக் கடிக்கும்போது பற்களில் குழிகள் விழாதவாறு பாதுகாப்பு உண்டாகிறது. வாயின் மேற்புறமும் சுத்தம் செய்யப்படுகிறது.

புதினா :

புதினா இலைகளை மெல்லும்போது, வாயில் இருந்து சுவாசம் நறுமணத்துடன் வீசுகிறது. வாயும் சுத்தமாகிறது.

எள் :

இவை பற்கள், ஈறுகளைப் பாதுகாக்கும் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது. இதன் மூலம் பற்களுக்கு சிறந்த பாதுகாப்பை உண்டாக்கும்.

பற்களில் உண்டாகும் பிரச்சினைகள் :

* ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை ஆரோக்கியமானதாக இருக்கும்.

* உங்களது வாய் துர்நாற்றம் அடிப்பது போல் தெரிந்தால், உடனடியாக பல் மருத்துவரை அணுகுவது நல்லது. வாய் நாற்றம் அடிக்க வாயில் உள்ள குறைபாடுகள் மட்டும் காரணம் கிடையாது. தொண்டை, வயிறு போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளாலும் வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நீரிழிவு நோய் தோன்ற வாய் துர்நாற்றமும் காரணம்தான்.

பற்களை பாதுகாக்கும் முறை :

பல் துலக்குதல்:

இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.

கொப்பளித்தல் :

சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.

நாக்கை சுத்தம் செய்தல் :

பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்..!

பாப்கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்கார்ன் மக்காசோளத்தினால் செய்யப்படுகிறது.
அதனால் அதன் சத்துக்கள் போய் விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும்.

தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் பாப்கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன.

ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்கார்ன் மிகவும் சிறந்தது.

மேலும் பாப்கார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், பாப்கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும்.

நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல், அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும்.

அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்கார்னில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும்.

மேலும் இதனை சாப்பிடுவதால் அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.

சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்

சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்..

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு..

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்..

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்..

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்..

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்..

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு..

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்..

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

காய்ச்சல்
சாதாரண ஜூரத்திற்கு..

இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

காய்ச்சல் குணமாக..

சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

காய்ச்சல்..

காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

குளிர்காய்ச்சல்..

நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

எந்த விதமான காய்ச்சலும் குணமாக..

வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்.

கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை

கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை:-

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது