நில அளவீடுகள்

நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு
•             10 நுண்ணணு = 1 அணு
•             8 அணு = 1 கதிர்த்துகள்
•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு
•             8 துசும்பு = 1 மயிர்நுனி
•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்
•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு
•             8 சிறு கடுகு = 1 எள்
•             8 எள் = 1 நெல்
•             8 நெல் = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம்
•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
•             4 காதம் = 1 யோசனை
•             வழியளவை
•             8 தோரை(நெல்) = 1 விரல்
•             12 விரல் = 1 சாண்
•             2 சாண் = 1 முழம்
•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
•             2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
•             4 குரோசம் = 1 யோசனை
•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

                16 சாண் = 1 கோல்
                18 கோல் = 1 குழி
                100 குழி = 1 மா
                240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1

 ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்



  • 1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
  • 1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
  • 1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
  • 1 ஹெக்டேர் – 10,000 சதுர அடி
  • 1 சென்ட் – 435.6 சதுர அடி
  • 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
  • 1 குழி – 144 சதுர அடி
  • 1 சென்ட் – 3 குழி
  • 3 மா – 1 ஏக்க‍ர்
  • 3 குழி – 435.6 சதுர அடி
  • 1 மா – 100 குழி



ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி
3.5 மா       = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர்  ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        1 பர்லாங், 40 கம்பங்கள்அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     1 சங்கிலி, 4 கம்பங்கள்அல்லது 22 கெஜம்
            

Google தேடலை விரைவாக மேற்கொள்ள சில குறுக்கு வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
 

இணைய தளம் கட்டளை (The site: command): 


இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, sholavandansethu இணைய தளத்தில் மட்டும் sholavandan  என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், sholavandan site www.sholavandansethu.blogspot.in/ எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, sholavandansethu இணைய தளத்தில் மட்டும், sholavandan என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.


குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.
 

விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”):


 தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.
 

குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command):


 இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.
 

'convert' கட்டளை: 


இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும். 


மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பின் முன்னுரை

முயல் வளர்ப்பு எதற்காக?
  • குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
  • சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
  • இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்
முயல் வளர்ப்பு யாருக்கு?
  • நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.
முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன?
  • முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
  • முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்
  • இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
  • முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
  • முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது

முயல் இனங்கள் மற்றும் கிடைக்குமிடம்

அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)
  • வெள்ளை ஜெயண்ட்
  • சாம்பல் ஜெயண்ட்
  • பிளமிஸ் ஜெயண்ட்
நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை
  • நியூசிலாந்து வெள்ளை
  • நியூசிலாந்து சிவப்பு
  • கலிஃபோர்னியா
குறைந்த எடை உள்ள இனங்கள் (2-3 கிலோ எடை)
  • சோவியத் சின்சில்லா
  • டச்சு வகை

சோவியத் சின்சில்லா - குறைந்த எடையுள்ள இனம்
வெள்ளை ஜெயண்ட் - அதிக எடையுள்ள இனம்

முயல் வளர்ப்பு முறைகள்

    ஆழ்கூள முறை
    • இம்முறையில் முயல்கள் வலைகள் தோண்டாதிருக்க கான்கிரீட்டிலான தரை அவசியம்.
    • உமி, வைக்கோல் அல்லது மரத்தூள் போன்றவற்றினை ஆழ்கூளமாக 4 முதல் 6 அங்குல உயரத்திற்கு இட வேண்டும்.
    • இவ்வகையில் 30 இளம் முயல்களுக்கு மேல் ஒன்றாக வளர்க்ககூடாது.
    • குறைந்த எண்ணிக்கையில் முயல் வளர்க்க விரும்புவோர்களுக்கு ஆழ்கூள முறை வளர்ப்பு ஏற்றது.
    • குறிப்பாக ஆண் முயல்களை தனிமைப்படுத்தி வளர்க்கவேண்டும். இல்லாவிடில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்ளும். இம்முறை தீவிர முறை வளர்ப்புக்கு ஏற்றதல்ல.
    • நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். இளங்குட்டிகள் பராமரிப்பும் கடினம்.
    கூண்டு முறை வளர்ப்பு
    • கூண்டு முறை வளர்ப்பில் அதிக எண்ணிக்கையிலான முயல்களை வளர்க்க இயலும். இம்முறையில் முயல்களை பராமரிப்பதும் எளிது.
    இட அளவு
    • வளர்ந்த ஆண்முயல் - 4 சதுர அடி (S.ft)
    • தாய் முயல் - 5 சதுர அடி
    • இளம் முயல் - 1.5 சதுர அடி
    பெரிய முயல் கூண்டு 1.5 அடி நீளம், 1.5 அடி அகலம் மற்றும் 1.5 அடி உயரம் உள்ள கூண்டுகள் பெரிய மற்றும் வளரும் முயல்களுக்கு போதுமானது. இந்த அளவுடைய கூண்டுகளில் ஒரு பெரிய முயலினையோ அல்லது இரண்டு வளரும் முயல்களையோ பராமரிக்கலாம்
    வளரும் முயல் கூண்டு
    • நீளம் - 3 அடி
    • அகலம் - 1.5 அடி
    • உயரம் - 1.5 அடி
    இந்த அளவுள்ள கூண்டுகளில் 4 முதல் 5 முயல்களை மூன்று மாத வயது வரை ஒன்றாக வளர்க்கலாம்
    குட்டி ஈனும் முயல்களுக்கான கூண்டு
    தாய் முயல்களுக்கான கூண்டுகள் வளரும் முயல்களுக்கான கூண்டின் அளவே இருக்க வேண்டும். இக்கூண்டுன் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டுப்பகுதி 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியால் ஆனது) வெல்டு மெஸ்ஸால் ஆனதாக இருக்கவேண்டும். இது இளங்குட்டிகள் கூண்டினை விட்டு வெளியே வராமல் தடுக்க உதவும்.
    குட்டி ஈனும் பெட்டி
    முயல்கள் குட்டி போடும் போது அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை அமைய குட்டி ஈனும் பெட்டி அவசியம். இப்பெட்டிகளை மரம் அல்லது துருப்பிடிக்காத இரும்புத்தகடு கொண்டு செய்யலாம். குட்டி ஈனும் பெட்டியினை குட்டி போடும் கூண்டினுள் வைக்கக்கூடிய அளவிற்கு செய்யவேண்டும்.
    குட்டி ஈனும் பெட்டியின் அளவு
    • நீளம் - 22 அங்குலம்
    • அகலம் - 12 அடி
    • உயரம் - 12 அடி
    குட்டி ஈனும் பெட்டிகள் மேல் பகுதியில் திறக்கக்கூடியவாறு செய்யப்பட வேண்டும். அடிப்பகுதி முழுவதும் 1.5 x 1.5 அங்குலம் என்ற அளவிலான (பற்றவைக்கப்பட்ட கம்பியாலானதாக) வெல்டு மெஸ்ஸாலானதாக இருக்கவேண்டும். பெட்டியினுடைய நீளவாட்டுப்பகுதியில் பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் 15 செ.மீ விட்டம் உள்ள வட்டவடிவ ஓட்டை அமைக்க வேண்டும். இது குட்டி போட்ட தாய் முயல் உள்ளே போய் வரப்போதுமானது. மேலும் இந்த ஓட்டை பெட்டியினுடைய அடிப்பகுதியிலிருந்து 10 செ.மீ உயரத்தில் இருப்பதால் இளங்குட்டிகள் வெளியே வராமல் தடுக்கிறது.
    புறக்கடை முயல் வளர்ப்பு கூண்டுகள்
    இக்கூண்டுகள் தரை மட்டத்திலிருந்து 3 அல்லது 4 அடி உயரத்தில் அடிப்பகுதியில் தண்ணீர் உள்ளே போகாதவாறு செய்ய வேண்டும்.
    தீவனம் மற்றும் குடிநீருக்கான உபகரணங்கள்
    பொதுவாக இவை துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்படுகின்றன. தீவன தொட்டிகள் "J" வடிவில் கூண்டின் முன்பகுதியில் வெளிப்புறமாக பொருத்தும் படி அமைக்கப்படவேண்டும். செலவினை குறைக்க சிறிய கிண்ணங்களை தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்கப் பயன்படுத்தலாம்
    "J" வடிவ தீவன தொட்டிகள்
    சிறிய தண்ணீர் கிண்ணம்

    தீவன மேலாண்மை

    • முயல்கள் அனைத்து வகையான தானியங்களையும் (சோளம், கம்பு மற்றும் இதர தானியங்கள்) பயறு வகைகளையும் (கொண்டை கடலை) நன்றாக சாப்பிடும். மேலும் இலை, பயறு வகை தாவரங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், அகத்தி, தட்டைப்பயறு போன்றவற்றையும் சமையலறை கழிவுகளான காய்கறி கழிவுகள் மற்றும் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கள் மற்றும் அவற்றினுடைய இலைகளை விரும்பி உண்ணும்.
    வகை
    தோராயமான உடல் எடை
    தீவன அளவு ஒரு நாளுக்கு
    கலப்பு தீவனம்
    பச்சை காய்கறி
    வளர்ந்த ஆண் முயல்
    4-5 கிலோ
    100 கிராம்
    250 கிராம்
    வளர்ந்த பெண் முயல்
    4-5 கிலோ
    100 கிராம்
    300 கிராம்
    பால் கொடுக்கும் முயல் மற்றும் சினை முயல்கள்
    4-5 கிலோ
    150 கிராம்
    150 கிராம்
    குட்டிகள்
    0.6-0.7 கிலோ
    50-75 கிராம்
    150 கிராம்
    மாதிரி அடர் தீவனக்கலவை
    மூலப்பொருட்கள்
    அளவு
    உடைத்த மக்காச்சோளம்
    30 பாகம்
    உடைத்த அரைத்த கம்பு
    30 பாகம்
    கடலைப்பிண்ணாக்கு
    13 பாகம்
    கோதுமைத் தவிடு
    25 பாகம்
    தாது உப்புக் கலவை
    1.5 பாகம்
    உப்பு
    0.5 பாகம்

    முயல்களின் இனப்பெருக்க மேலாண்மை

    • இனப்பெருக்க வயது:பெண்முயல் - 5-6 மாதங்கள், ஆண் முயல்- 5-6 மாதங்கள் (ஆண்முயல்களும் 5-6 மாதங்களில் பருவத்தினை அடைந்தாலும் ஒரு ஆண்டிற்குப் பிறகு இனவிருத்திக்கு பயன்படுத்தினால் அதிகப்படியன தரமான குட்டிகள் கிடைக்கும்)
    • இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் அதிக குட்டிகள் ஈனப்பட்ட ஈற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்
    • நல்ல ஆரோக்கியமான முயல்களையே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும்.
    • ஆண் முயல்களை தேர்வு செய்யும் போது மேற்கூறிய பண்புகளுடன் அதன் விதைப்பையில் இரண்டு நன்கு வளர்ந்த விதைகள் உள்ளனவா என்பதனை பார்த்தே வாங்க வேண்டும்
    • ஆண்முயலுடன் பெண் முயலை அருகில் வைக்கும் போது பெண் முயல்கள் சினைப்பருவத்திலிருந்தால் அதன் முதுகு நடுப்புறம் வளைந்து உடலின் பின் பகுதி உயர்ந்த நிலையில் நிற்கும். அதே சமயம் பெண் முயல்கள் சினைப்பருவத்தில் இல்லாவிடில் உடல் குறுகி கூண்டின் ஒரு மூலையில் அமர்ந்து விடும். சில சமயங்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை தாக்கத் துவங்கும்.
    • ஆண் பெண் விகிதம் 1 : 10
    • சினைப்பருவம் 28-31 நாட்கள்
    • இறைச்சி முயலின் சினைக்காலம் - 28 -31 நாட்கள் ஆகும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 12 முதல் 14 வது நாளில் முயலின் அடிவயிற்றினை தடவிப்பார்த்து சினைப்பட்டதை அறியலாம். இதற்காக தாய் முயல் கூண்டின் மேல் வைத்து அது அமையதியடைந்த பின்னர், பின் கால்களுக்கு இடையில் வயிற்றப்பகுதியில் கை விரல்களால் மெதுவாக தடவிப்பார்த்தால் சிறிய நெல்லிக்கனி போன்ற உருண்டையான சதைக்கோளம் விரல்களில் தட்டுப்பட்டால் சினைப்பட்டதை உறுதி செய்யலாம்.
    • மூன்று முறைக்கு மேல் இனச்சேர்க்கை செய்த பின்னும் சினைப்படாத முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.
    • இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 25 வது நாள் குட்டி போடும் கூண்டிற்கு மாற்ற வேண்டும்.
    • நன்கு வெய்யிலில் காய்ந்த தேங்காய் நார் அல்லது வைக்கோலினை குட்டி போடும் பெட்டியில் வைக்க வேண்டும். தாய் முயல்கள் இந்த நார் பொருட்களுடன் குட்டி போடுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக தன் அடிவயிற்றிலுள்ள பஞ்சு போன்ற உரோமத்தினை பிடுங்கி குட்டி போடுவதற்கான ஒரு கூட்டினை அமைக்கும்.
    சினை முயல்களை பராமரிக்கும் முறைகள்
    • பெரும்பாலும் அதிகாலை வேலைகளில் தான் முயல்கள் குட்டி போடும். சராசரியாக 15 முதல் 30 நிமிடங்களில் முயல்கள் குட்டிகளை ஈன்று விடும்.
    • இந்த நேரத்தில் முயல்களை தொந்தரவு செய்யக்கூடாது. வெளிஆட்களை குட்டி போடும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.
    • பிறந்த குட்டிகள் கண் மூடி உரோமமில்லாமல் இருக்கும். அவை குட்டி ஈனும் பெட்டிக்குள் தாய் முயலால் உருவாக்கப்பட்ட உரோம மெத்தையில் ஒன்றாக படுத்திருக்கும்.
    • தாய் முயல் சராசரியாக ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பால் கொடுக்கும். பொதுவாக அதிகாலை நேரத்தில் தாய் முயல்கள் பால் கொடுக்கும்.
    • வலுக்கட்டாயமாக நாம் பாலூட்டச்செய்தால் முயல்களில் பால் சுரப்பு இருக்காது. நன்கு பால் குடித்த குட்டிகள் தோல் சுருக்கமின்றி மினுமினுப்பாக காணப்படும்.
    குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தல்
    • சுமார் 4 முதல் 6 வார வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்க வேண்டும்.
    • தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கான உணவில் திடீரென மாற்றங்கள் செய்யக்கூடாது.

    ஆரோக்கியமான முயல்களின் அறிகுறிகள்

    • தோல் மற்றும் உரோமம் பொலிவுடன் காணப்படும்
    • ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்று இருக்கும்
    • தீவனம் போட்டவுடன் உடனே தின்று விடும்
    • கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றி காணப்படும்
    • முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரிக்கும்

    நோயுற்ற முயல்களின் அறிகுறிகள்

    • சோர்வாகவும் தளர்ச்சியுடனும் காணப்படும்
    • முயல்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும்
    • அதிகமாக முடி கொட்டல் காணப்படும்
    • முயல்கள் அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும்
    • முயல்களின் தீவனம் எடுக்கும் அளவு குறைவாக காணப்படும்
    • முயல்களின் மூக்கு, வாய், மலத்துவாரம் மற்றும் கண்களிலிருந்து நீர் அல்லது சளி போன்ற திரவம் வடிந்து கொண்டிருக்கும்
    • உடல் வெப்பநிலை அதிகரித்து வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்

    முயல்களில் ஏற்படும் நோய்கள்

    நீர்க்கோப்பு நோய்
    குறைவான காற்றோட்ட வசதி, புழுக்கமான முயல் கொட்டகை, சுகாதாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முயல்களை இந்நோய் தாக்கத்திற்கு உட்படுத்துகின்றன. தாய் முயலிடமிருந்து குட்டிகளுக்கு இந்நோய் பரவுகிறது.
    அறிகுறிகள் : நிரந்தர தும்மல் மற்றும் இருமலால் முயல்கள் முன்னங்கால்களால் மூக்கை துடைத்துக்கொண்டே இருக்கும். முயல்கள் மூச்சு விடும் போது கிலுகிலுப்பை போன்ற ஒலி உண்டாக்கும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் பெருமூச்சு வாங்குதல் போன்றவையும் காணப்படும். நீர்க்கோப்பு நோயுடன் இணைந்து தோலுக்கடியில் சீழ்க்கட்டி உண்டாதல், கழுத்து கோணல் நோய் போன்றவற்றையும் இக்கிருமி ஏற்படுத்துகிறது.
    சிகிச்சை : பெரும்பாலும் சிகிச்சை பலனளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட முயல்கள் குணமடைந்தாலும் அவை நோய்க்கிருமிகளை மற்ற முயல்களுக்கும் பரப்புவதால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விடுவதே நோயினைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.
    கழிச்சல் நோய்
    முயல்களில் கழிச்சல் நோயானது பல்வேறு வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. இந்நோய்க்கிருமிகள் திடீரென தீவனத்தை மாற்றுவதாலும் முக்கியமாக மாவுச்சத்து உள்ள தீவனத்தை அதிகமாக தருவதாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைகின்ற சமயங்களிலும் சுகாதாரமற்ற தீவனம் மற்றும் தண்ணீரினை தொடர்ந்து தருவதாலும் கழிச்சலை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் வயிறு உப்பியும், தோல் மற்றும் உரோமங்கள் பொலிவிழந்தும் அதிகமான வயிற்றுப்போக்கினால் மிகுந்த நீரிழப்பு உண்டாகி துவண்டு போய் காணப்படும்
    கழுத்துக்கோணல் நோய்
    நீர்க்கோப்பு நோயினால் பாதிக்கப்பட்ட முயல்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன. இந்நோய் நடுக்காது மற்றும் மூளை ஆகியவற்றை பாதிக்கிறது. காதுகளின் நடுச்சவ்வு பாதிப்படைந்து காதுகளிலிருந்து சீழ் வடிவதால் அதிக வலியின் காரணமாக நோய் தாக்கிய முயல்கள் தலையை ஒரு புறமாக திருப்பிக் கொள்ளும். நீர்க்கோப்பு நோயினை முற்றிலும் குணப்படுத்துவதன் முலம் இந்நோயினை தவிர்க்கலாம்
    மடி நோய்
    பாலூட்டும் முயல்களுக்கு இந்நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட மடியானது சூடாகவும், சிவந்தும், வீங்கியும் காணப்படும். தகுந்த எதிர் உயிரி மருந்துகளைக் கொண்டு இந்நோயினை கட்டுப்படுத்தலாம்
    பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
    டெர்மடோபைசிஸ் எனும் வகையினை சேர்ந்த பூஞ்சைகள் முயல்களில் படை மற்றும் சொறி நோயினை உண்டாக்குகின்றன. இப்பூஞ்சைகள் முயல்களின் காது மற்றும் மூக்குப்பகுதியில் திட்டு திட்டாக முடி உதிரச் செய்து சொறியினை உண்டாக்கும். அரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட முயல்கள் முன்னங்கால்களால் காது மற்றும் மூக்குப் பகுதிகளை தொடர்ந்து சொறிவதினால் அப்பகுதிகளில் புண்கள் ஏற்படும். பின்னர் மற்ற பாக்டிரியாக்களின் பாதிப்பினால் சீழ் உண்டாகும்.
    சிகிச்சை : கிரிசியோபல்வின் அல்லது பென்சைல் பென்சோயேட் களிம்பினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். கிரிசியோபல்வின் மருந்தினை 0.75 கிராம் அளவு ஒரு கிலோ தீவனத்துடன் கலந்து இரண்டு வாரங்களுக்கு முயல்களுக்கு கொடுப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்

    நோயினைத் தடுக்க முயல் பண்ணை சுகாதாரம்


    • முயல் கொட்டகைக்கு வருடம் இரு முறை சுண்ணாம்பு பூச வேண்டும்
    • வாரம் இரு முறை கூண்டுகளுக்கு கீழே சுண்ணாம்புக் கரைசலை தெளிக்க வேண்டும்
    • கோடைக்காலங்களில் கூண்டுகளின் மேலும் முயல்களின் மேலும் நீர் தெளித்து கொட்டகையின் வெப்பத்தை குறைத்தால் அதிக வெப்பத்தால் முயல்களில் ஏற்படும் இறப்பினை தவிர்க்கலாம்
    • நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை முயல்களுக்கு குறிப்பாக குட்டி போட்ட மற்றும் இளவயது முயல்களுக்கு கொடுக்க வேண்டும்

    இயற்கை முறையில் இனிப்பான லாபம்... கலக்குது கற்பூரவல்லி.

    வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ''இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது... கற்பூரவல்லி வாழை!’' என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.

    உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க... பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
    கை விட்ட விவசாயம்!
    ''எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்... நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால... நிரந்தர வருமானத்துக்காக 'பால் உற்பத்தி பண்ணலாம்'கற யோசனையோட... வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா... பால்ல கிடைச்ச வருமானம்... மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
    வழிகாட்டிய பசுமை விகடன்!
    பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ... நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
    நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்!
    ''பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே, ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. தரமில்லாத விதைநெல்லை ஏமாந்து வாங்கிட்டதால, அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால, மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேணுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்துட்டேன். நல்ல சுவையாவும், மணமாவும் இருந்ததால... சீக்கிரமே வித்துப்போச்சு.
    அப்பறம், தரமான விதைகளை தேடினப்போ... மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதைநெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம், பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி... இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சுது.
    புயலுக்குப் பிறகும் மகசூல்!
    கிட்டத்தட்ட இதேசமயத்துல... ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத் துலேயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கறதால... செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு... மறுதழைவு மூலமாவே பலன் எடுத்துட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால... முட்டு கொடுக்குறதுக்குக்கூட மரம் வெக்கிறதில்லை. 'தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத் தோப்புல ஒரே சமயத்துலதான் தார் கிடைக்கும். ஆனா, மரங்களை வெட்டிவிட்டதால... ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால, 15 நாளைக்கு ஒரு முறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா... வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது.
    என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக...
    70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறுதானியம் விதைக்கலாம்னு இருக்கேன்'' என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
    அது அப்படியே பாடமாக இங்கே...
    ஏக்கருக்கு 1,000 வாழை!
    'கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு 8 மாட்டு வண்டி என்ற கணக்கில், எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்டவேண்டும். 8 அடி இடைவெளியில், செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரையடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1,000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்திரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது.
    பூச்சி, நோய் தாக்காது!
    தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து, நடவு செய்த 3-ம் நாளில் உயிர்தண்ணீர்விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்கள் வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். இதேபோல... நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும் (ஏக்கருக்கு,
    100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் ஜீவாமிர்தம்; 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3, 6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்துவிட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
    பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை!
    2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும். ஒன்பதாம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை... தேவையில்லாத பக்கக்கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டுவர வேண்டும்.
    குலை தள்ளிய மூன்று மாதத்தில்... அதாவது, 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள், அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.
    ஏக்கருக்கு 90 ஆயிரம்!
    சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1,000 வாழை மரம் நட்டா... சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்தபட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா
    150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே...
    900 வாழை தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சி பொங்க செலவு-வரவு கணக்கைச் சொன்னார்!