நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்

நம் உடல் நலத்துக்கு ஏற்ப இயற்கை மருத்துவ குறிப்புகள்:-


* உடலில் எந்த உறுப்பில் சுளுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் சிறிது மிளகுத்தூளையும், கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி, சுளுக்குள்ள இடத்தில் பூசினால் சுளுக்கு போய்விடும்.

* வயிற்றில் சங்கடமா? அரை தம்ளர் மோரில் சிறிது தண்ணீர் விட்டு துளி உப்பும் கொஞ்சம் பெருங்காயப்பொடியும், அரை தேக்கரண்டி சர்க்கரையும் போட்டுக் கலக்கிக் குடித்தால் போதும். அடுத்த அரை மணியில் முகம் பிரசன்ன வதனமாகிவிடும்.

* பெண்களுக்கு 40 வயதில் மாதவிடாய் பிரச்னை இருப்பது சகஜம். ராகியை மாவாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால் சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உதிரப்போக்கு கட்டுப்படும்.

* 40 வயதுப் பெண்களுக்கு லேசான தலை சுற்றல் வரும். இதைத் தடுக்க சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சம அளவில் சேர்த்து இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை சுற்றல் நிற்கும்.

* மாதவிலக்கின்போது ஏற்படும் வலியைக் குறைக்க கட்டிப் பெருங்காயத்தை நீரில் கெட்டியாகக் கரைத்து மடக் மடக் என்று குடித்துவிட வேண்டும்.

* வயிற்றுப் புண்ணினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மிதமான சூடான வெந்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் உடனே வலி குறையும்.

* அதிகமான மது குடித்ததினால் உண்டான தலைவலி அல்லது அஜீரணத்தால் உண்டான தலைவலி எல்லாம் வெந்நீர் சாப்பிடுவதால் குணமடையும்.

* இஞ்சியைப் பல் வலிக்கும் இடத்தில் வைத்துக்கொண்டு இஞ்சிச்சாறு அதில் வரும்படி பல்லினால் அழுத்தமாக கடித்துக் கொண்டால் பல்வலி நிமிஷத்தில் மறைந்துவிடும்.

* "கேஸ்டிக் அல்சர்' தொந்தரவு உள்ளவர்கள் வயிறு சம்பந்தமான எந்தக் கஷ்டமாக இருந்தாலும் அதற்குத் தினம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலைக் கொழுந்தை சாப்பிட வேண்டும்.

* வாய்ப் புண்ணிற்கு பச்சரிசி, பயத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தயம், நிறைய பூண்டு உரித்துப் போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட வேண்டும்.

* பேதியோ, வயிற்றுப்போக்கோ ஏற்பட்டால் வெந்தயத்தை நன்றாக கறுப்பாக வறுத்து, நைஸôக பொடி செய்து ஒரு தேக்கரண்டி பொடியில் சிறிது தேன் விட்டுக் கலந்து உட்கொள்ள சரியாகிவிடும்.

* திராட்சைப்பழமும், உலர்ந்த திராட்சையும் ஜீரண சக்தியை வலுப்படுத்தி குடல்புண், சிறுநீரகம் முதலியவற்றைச் சுத்தப்படுத்துகிறது.

* மலச்சிக்கல் உடையவர்கள் இரவில் பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உகந்தது

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்:-


கோடைக் காலத்திற்கு என்று தனியாக ஏதேனும் உணவுகள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டாம். கோடைக் காலத்தில் நமது உடல் இழக்கும் நீர்த்தன்மையை அதிகரிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும், நமது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதாவது நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேணடும்.

அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

உணவில் மோர் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஊறுகாய், உப்புத் தன்மை கொண்ட மோர் மிளகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம்.

அதிகமாக நீர் பருகுங்கள். காபி, டீ ஆகியவற்றை திரவ ஆகார பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

நீர் மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகளை உணவிற்கு இடையே சேர்த்துக் கொள்வது நன்மையளிக்கும்.

இரவு வடித்த சாதத்தில் நீரை ஊற்றி அதனை காலையில் சிறிது உப்பு சேர்த்து அருந்துவது வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும்.

வெயிலில் அலைபவர்கள் மட்டும் குளுக்கோஸ் கலந்த நீரை பருகலாம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

புளி, காரம், உப்பைக் குறைத்து எளிமையான அதே சமயம் சத்தான உணவை தினமும் உண்ணுங்கள்.

கீரை, கிழங்கு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாம். வெள்ளரி, தர்பூசணி, மெலாம் பழங்களை சாறு எடுத்து பருகாமல், பழங்களாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரையும் குறையும்.

சின்னம்மை பற்றிய தகவல்கள்

சின்னம்மை பற்றிய தகவல்கள்:-


சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. 100 டிகிரிக்கும்மேல் காய்ச்சல் இருக்கும். கண்களில் இருந்து தண்ணீர் கொட்டும். வயிறு, நெஞ்சுப் பகுதிகள் சிவப்பாகி, கை, கால் என்று உடலின் பிற பகுதிகளிலும் சிறு சிறு நீர்க் கட்டிகள் உருவாகும். கடும் அரிப்பை உருவாக்கும்.
அரிப்பு ஏற்பட்டு சிவக்கிற சமயத்தில்தான் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும். அதனால் சிவக்கும் சமயத்தில் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சுமார் ஒரு வாரம் வரை இந்த நீர்க் கட்டிகள் இருக்கும். பின்பு, அவை தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும். நல்ல ஊட்டச் சத்து மிக்க காரம் இல்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். நீர்ச் சத்து மிக்க உணவு, இளநீர், பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்

சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!



தற்போது சுகப்பிரசவம் என்பது குறைந்துவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் தான் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும் போது சிக்கல் ஏற்பட்டால், தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் சிசேரியன் பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே தான். ஆனால் உண்மையில் சிசேரியன் பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும், அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆம், சிசேரியன் பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொள்ள, கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* முதலில் சிசேரியன் பிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுப்பது தான். அவ்வாறு ஆப்ரேஷன் செய்வதால், வயிற்றில் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். பின் என்ன தான் செய்தாலும் போகாது. அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் ஆப்ரேஷன் செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது ஆப்ரேஷன் வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

* சுகப்பிரவத்தை விட சிசேரியன் செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது.

* பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக சிசேரியன் பிரசவத்திற்கு பின் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் சிசேரியன் பிரசவத்திற்கு பின் சரியான ஓய்வு எடுக்காவிட்டால், இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.

* ஒரு முறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால், அடுத்த முறை சுகப்பிரசவம் ஏற்படாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலானோருக்கு முதல் முறை சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் இருந்ததில்லை. மேலும் மருத்துவர்கள் இரண்டாம் முறையும் சிசேரியன் என்றால், இதற்கு மேல் குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஏனெனில் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் சிசேரியன் செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும்.

* சிசேரியன் செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் சிசேரியன் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?

* அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.

* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.

* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.

* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.

* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.

* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.

* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.

* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:

* இரத்த அழுத்த நோய்

* இருதய படபடப்பு

* கல்லீரல் பாதிப்பு

* பித்தக் குறையாடு

* நீரிழிவு நோய்

* மூட்டு வலி

* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.

* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:

* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.

* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.

* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.

* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.

* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.

* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.

* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.

* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உடல் பருமன் குறைய மருத்துவம்:

சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.

அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ

கொத்தமல்லி விதை - 1\4 கிலோ

சீரகம் - 25 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீ­ரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.