உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது?
* இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.
* உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
* அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.
* சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.
* நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
* ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
* அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.
* உடம்பில் அதிக வியர்வை காணுதல்.
* நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.
* அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:
* இரத்த அழுத்த நோய்
* இருதய படபடப்பு
* கல்லீரல் பாதிப்பு
* பித்தக் குறையாடு
* நீரிழிவு நோய்
* மூட்டு வலி
* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
* பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.
* மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:
* உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.
* அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.
* பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.
* எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.
* மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.
* மது பானங்கள் சாப்பிடக் கூடாது.
* குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
* பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.
* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.
* யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.
* உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமன் குறைய மருத்துவம்:
சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.
அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,
உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ
கொத்தமல்லி விதை - 1\4 கிலோ
சீரகம் - 25 கிராம்
இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு,, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment