கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்

கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள்:-


கோடைக் காலத்திற்கு என்று தனியாக ஏதேனும் உணவுகள் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டாம். கோடைக் காலத்தில் நமது உடல் இழக்கும் நீர்த்தன்மையை அதிகரிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும், நமது உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதாவது நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேணடும்.

அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

உணவில் மோர் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்ல பலனை அளிக்கும்.

ஊறுகாய், உப்புத் தன்மை கொண்ட மோர் மிளகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம்.

அதிகமாக நீர் பருகுங்கள். காபி, டீ ஆகியவற்றை திரவ ஆகார பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

நீர் மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறுகளை உணவிற்கு இடையே சேர்த்துக் கொள்வது நன்மையளிக்கும்.

இரவு வடித்த சாதத்தில் நீரை ஊற்றி அதனை காலையில் சிறிது உப்பு சேர்த்து அருந்துவது வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும்.

வெயிலில் அலைபவர்கள் மட்டும் குளுக்கோஸ் கலந்த நீரை பருகலாம்.

குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரகத் தண்ணீர் கொடுக்கலாம்.

புளி, காரம், உப்பைக் குறைத்து எளிமையான அதே சமயம் சத்தான உணவை தினமும் உண்ணுங்கள்.

கீரை, கிழங்கு ஆகியவற்றை அதிகமாக சாப்பிடலாம். வெள்ளரி, தர்பூசணி, மெலாம் பழங்களை சாறு எடுத்து பருகாமல், பழங்களாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்தும் உடலுக்குக் கிடைக்கும். தேவையற்ற சர்க்கரையும் குறையும்.

No comments: