கமலுக்கு விஜயகாந்த் ஆதரவு
சென்னை: கமலை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த்
வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படப்பிரச்னையில், தமிழக அரசின்
அணுகுமுறை சரியில்லை. உலகம் போற்றும் ஒரு கலைஞன், இந்தநாட்டை விட்டு
வெளியேற தயாராக இருக்கிறேன். மத சார்பற்ற நாட்டைக்கண்டு அங்கு சென்று
குடியேறுவேன் என அவர் கூறியுள்ள வார்த்தை தமிழகத்திலுள்ள அனைவரின் மனதையும்
ரணமாக்கியுள்ளது. கமல்ஹாசனை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள
முடியாது . விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது 144 தடை உத்தரவு பிறப்பித்து
உள்ளனர். அப்படியானால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை
முதல்வர் ஒத்துக்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில்
சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என
கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment